மூடு

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள்:

கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்:

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு கீழ்கண்டவாறு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

 • 1 முதல் 5 வகுப்பு வரை ரூ.1000/-
 • 6 முதல் 8 வகுப்பு வரை ரூ.3000/-
 • 9 முதல் 12 வகுப்பு வரை ரூ.4000/-
 • இளங்கலை பட்டம் ரூ.6000/-
 • முதுகலை பட்டம் ரூ.7000/-

வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டம் :

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு கீழ்கண்டவாறு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

 • 9 முதல் 12 வகுப்பு வரை ரூ.3000/-
 • இளங்கலை பட்டம் ரூ.5000/-
 • முதுகலை பட்டம் ரூ.6000/-

பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம் :

 • 40% மேல் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது.
 • 75% மேல் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது.
 • 40% மேல் தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது.
 • 40% மேல் தொழு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது.

சுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டம் :

மாற்றுத்திறனாளிகளுக்கான சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று சுயத்தொழில் புரியும் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு வங்கி கடன் மானியமாக ரூ.10,000/- அல்லது கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இதில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படுகிறது.

திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம் (பட்டபடிப்பு படிக்காதவர்களுக்கு) :

 • பார்வையற்ற மாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ. 25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. (ரூ.12500/- தேசிய சேமிப்பு பத்திரம், ரூ. 12500/- காசோலை)
 • காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ. 25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. (ரூ.12500/- தேசிய சேமிப்பு பத்திரம், ரூ. 12500/- காசோலை)
 • கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ. 25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. (ரூ.12500/- தேசிய சேமிப்பு பத்திரம், ரூ.12500/- காசோலை)
 • மாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத்திறனாளி நபருக்கு ரூ. 25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. (ரூ.12500/- தேசிய சேமிப்பு பத்திரம், ரூ.12500/- காசோலை)

குறிப்பு :

மேற்காணும் அனைத்து திருமண உதவி திட்டங்களிலும் பட்டயம் மற்றும் பட்டபடிப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. (ரூ.25000/- தேசிய சேமிப்பு பத்திரம், ரூ.25000/- காசோலை)

பேருந்து பயண சலுகை வழங்கும் திட்டம் :

 • பார்வையற்ற மாற்றுத்திறனாளி நபர்களுக்கு மாவட்டம் முழுவதும் பயணம் மேற்கொள்ள இலவச பேருந்து பயணசலுகைத் திட்டம்.
 • இதர மாற்றுத்திறனாளி நபர்களுக்கு கல்வி பயிலுவதற்கு, பணிக்கு செல்வதற்கு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு 100 கி.மீ. மிகாமல் பயணம் செய்ய பேருந்து பயணசலுகைத் திட்டம்.
 • 75% கட்டண சலுகையின் மூலம் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் திட்டம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம் :

 • மூன்று சக்கரவண்டி
 • சக்கர நாற்காலி
 • சிறப்பு சக்கர நாற்காலி
 • முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நவீன சிறப்பு சக்கர நாற்காலி
 • பிளாஸ்டிக் முட நீக்கியல் சாதனம்
 • உலோகத்திலான முட நீக்கியல் சாதனம்
 • செயற்கை கால்
 • ஊன்றுகோல்
 • இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்
 • நவீன செயற்கை கால்
 • கருப்பு கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல்
 • பிரெய்லி கைகடிகாரம்
 • எழுத்துகளை பெரிதாக்கும் கருவி
 • மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம்
 • காதொலிக்கருவி
 • சூரிய ஒளியால் சக்திபெறும் பேட்டரி
 • காதுக்கு பின்னால் பொருத்தும் காதொலி கருவி

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் :

 • தனிநபர் விபத்து நிவாரணம் – இழப்பினை பொருத்து ரூ.1,00,000/- வரை
 • ஈமச்சடங்கு செலவு – ரூ.2,000/-
 • இயற்கை மரண உதவி – ரூ.15,000/-
 • கல்வி உதவித்தொகை – ரூ.1000/- முதல் 4000/- வரை
 • திருமண உதவித்தொகை – ரூ.2000/-
 • மகப்பேறு உதவி – ரூ.6000/-
 • மூக்கு கண்ணாடி வாங்குவதற்கு – ரூ.500/-