தேர்தல்-2019

படங்கள் ஏதும்  இல்லை

தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி (05-04-2019)

வெளியிடப்பட்ட நாள்: 05/04/2019

எதிர் வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் – 2019ஐ முன்னிட்டு நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட கொளப்பள்ளியில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (05.04.2019) நடைபெற்றது. (PDF 24KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

வெளியிடப்பட்ட நாள்: 05/04/2019

நீலகிரி மாவட்டம் உதகை பிங்கர்போஸ்ட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் எதிர் வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் -2019ஐ முன்னிட்டு தேர்தல் பொது பார்வையாளர் திரு.உசன் லால்,இ.ஆ.ப., அவர்கள், தேர்தல் செலவின பார்வையாளர் திரு.டி.கிப்கென் I.R.S  அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப.. அவர்கள் ஆகியோர் விழிப்புணர்வு வீடியோ வாகனத்தை இன்று (02.04.2019) கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். PDF (30KB)

மேலும் பல
Observer Inspection

பொது பார்வையாளராக திரு. உசன் லால் இ.ஆ.ப., அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2019

பொது பார்வையாளராக இந்திய தேர்தல் ஆணையத்தால் திரு. உசன் லால் இ.ஆ.ப., அவர்கள் 19 நீலகிரி(தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். (PDF 625 KB)

மேலும் பல
training class

வாக்கு சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள்

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2019

உதகை சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மேலும் பல
awareness programs

கோத்தகிரியில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

வெளியிடப்பட்ட நாள்: 22/03/2019

எதிர் வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் – 2019ஐ முன்னிட்டு நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (22.03.2019) நடைபெற்றது. (PDF 26KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 13/03/2019

எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தல் 2019-ஐ முன்னிட்டு நீலகிரி மாவட்டம்  குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் இன்று  (13.03.2019) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  (PDF  23KB)

மேலும் பல