மூடு

காணத்தக்க இடங்கள் – கோத்தகிரி

பழங்குடியினர் அருங்காட்சியகம்

பழங்குடியினர் அருங்காட்சியகம், நீலகிரி மாவட்டம், உதகமண்டலம், மு.பாலாடா, பழங்குடியினர் ஆய்வு மைய வளாகத்தில் அமைந்துள்ளது. பழங்குடியினர் அருங்காட்சியக கட்டிட கட்டுமான பணி செப்டம்பர் 12, 1989ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1995ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. ஆக்டோபர் 2, 1995 முதல் பழங்குடியினர் அருங்காட்சியகம் செயல்படத்துவங்கியது. க்ஷசப்டம்பர் 13, 1995 முதல பழங்குடியினர் ஆய்வு மையம் மற்றும் பழங்குடியினர் அருங்காட்சியகம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை கழகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் […]

டால்பின் நோஸ்

குன்னூரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் ‘டைகர் ஹில்’ பகுதிக்கு அண்மையில் அமைந்த அற்புதம் கலந்த பாறை மலையான இம்மலை தன் முகத்தை வெளிப்பக்கம் நீட்டி டால்பினின் மூக்கு போல் அமையப் பெற்றது தான் இதன் பெயர்க்காரணம். இம்மலையின் வலது மற்றும் இடது புறங்களில் பரவசமூட்டும் பள்ளத்தாக்குகள், மறுபக்கத்தில் கோத்தகிரிப் பகுதியின் கேத்தரின் நீர்வீழ்ச்சியும், குன்னூரின் நீரோடையும் சங்கமிக்கும் காட்சி, மேலும் இவ்விரண்டும் பணிவுடனே பவானி ஆற்றில் கலக்கும் சிறப்பு ஆகியன கவின்மிகு காட்சிகளாகும்.