மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்:348- சமூகநீதி கல்லூரி விடுதிககளுக்கு Professional Outsourcing Agency மூலம் தூய்மைப்பணியாளர்கள் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026

நீலகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில் கீழ் உள்ள சமூகநீதி கல்லூரி மாணவ/மாணவியர் விடுதிகளை சுத்தமாகவும். சுகாதாரமாகவும் பராமரிக்கும் பொருட்டு, தூய்மைப்பணியாளர் பணியிடங்களை தொழில் அனுபவம் மிக்க Professional Outsourcing Agency மூலம் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. (PDF 49KB )

மேலும் பல

செ.வெ.எண்:347- ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சிறந்த எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டு சங்கத்தின் மூலம் ஒவ்வொடு ஆண்டும் சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த இலக்கிய படைப்பினை வெளியிட உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.  (PDF 69KB )

மேலும் பல

செ.வெ.எண்.346- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 13.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (13.07.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 146 மனுக்களை பெற்றுக் கொண்டார்.  (PDF 45KB )

மேலும் பல

செ.வெ.எண்:345- 15.07.2026 அன்று முற்பகல் 09.௦௦ மணியளவில் ‘உங்களைத் தேடி,உங்கள் ஊரில்’ என்ற திட்டமானது பந்தலூர் வட்டத்தில் நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026

தமிழ்நாடு அரசு மூலம் மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு,உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் என்ற அடிப்படையில் ‘உங்களைத் தேடி,உங்கள் ஊரில்” என்ற திட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து, எதிர்வரும் 15.07.2026 அன்று முற்பகல் 09.௦௦ மணியளவில்; ‘உங்களைத் தேடி,உங்கள் ஊரில் என்ற திட்டமானது பந்தலூர் வட்டத்தில் நடைபெற உள்ளது. (PDF 43KB )

மேலும் பல

செ.வெ.எண்:344- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 11/07/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை (குடும்ப நல செயலகம்த) சார்பில், உலக மக்கள் தொகை தினம் 2026-ஐ முன்னிட்டு, செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு ரதத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.07.2026) கொடியசைத்து துவக்கி வைத்து, விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கினார். (PDF 30KB )

மேலும் பல

செ.வெ.எண்:343- தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பெற்ற சூலை 18ஆம் நாளான தமிழ்நாடு நாளினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 11/07/2026

தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பெற்ற சூலை 18ஆம் நாளான தமிழ்நாடு நாளினை மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்திக் கொண்டாடுமாறு மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ்வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். (PDF 366KB )

மேலும் பல

செ.வெ.எண்:342- அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான மறுவாழ்வு சேவைகளும், அரசுநலத்திட்ட உதவிகளும் கிடைக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் “விழுதுகள்” மையம்.

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையான மறுவாழ்வு சேவைகளும், அரசுநலத்திட்ட உதவிகளும் இப்போது ஒரே இடத்தில் கிடைக்கும்.ஒருங்கிணைந்த சேவை மையம் தான் “விழுதுகள்” மையம். (PDF 90KB )

மேலும் பல

செ.வெ.எண்:341- TNPSC தொகுதி-I தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தொகுதி-I (Group I) சேவைகளுக்கான அறிவிக்கைஎண்.05/2026 வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் நடத்தப்பட உள்ளது. (PDF 66KB )

மேலும் பல

செ.வெ.எண்:340- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உணவு ஊட்டசத்து இயல் (Nutrition & Dietetics) உடல் எடை சீரமைப்பு (Slimming & Weight loss courses) போன்ற பயிற்சிகள் வழங்குதல்

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

தாட்கோ, நீலகிரி மாவட்டம் – தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உணவு ஊட்டசத்து இயல் (Nutrition & Dietetics) உடல் எடை சீரமைப்பு (Slimming & Weight loss courses) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது . (PDF 67KB )

மேலும் பல

செ.வெ.எண்:339- அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் பழங்குடியினர் தொழில் துவங்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அழைப்பு!!!

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்(AABCS) கீழ் பழங்குடியினர் தொழில் துவங்க மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.அவர்கள் அழைப்பு!!! (PDF 68KB )

மேலும் பல