மூடு
'உங்கள் சேவையில்' - வாட்ஸ்ஆப் புகார் எண் - 9943126000.              அனைத்துப் பிளாஸ்டிக் பொருட்களும் நீலகிரி மாவட்டத்தில் பயன்படுத்த தடைசெய்யப்பட்டுள்ளது.

new gifசிவிஜில் - தேர்தல் விதிமீறல்களை புகார் அளிக்க       அனுபோக சான்றின் விண்ணப்பநிலை      

இணையவழி நில விற்பனை அனுமதி        இணையவழி மரம் வெட்டுவதற்கான அனுமதி       

new gifநாடாளுமன்ற பொதுதேர்தல் – 2024       

மாவட்டம் பற்றி

நீலகிரி மாவட்டம் உங்களை வரவேற்கிறது. உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களுள் ஒன்றான மேற்குத்தொடர்ச்சி மலைகளின் பகுதியான நீலகிரி தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் முக்கியமான சந்திப்புப் புள்ளியாகும். ”மலைகளின் அரசி” எனப்படும் உதகமண்டலம், குன்னூர் (உதகையி்ல் இருந்து 19 கி.மீ. தொலைவு) மற்றும் கோத்தகிரி (உதகையி்ல் இருந்து 31 கி.மீ) ஆகியவை நீலகிரி மாவட்டத்தின் முக்கிய நகரங்களாகும்.

பசும்புல்வெளிகள், அடர்த்தியான சோலைகள், எழில்கொஞ்சும் அருவிகள், சிற்றோடைகள், ஏரிகள், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள், அவற்றிற்கிடையே அமைந்துள்ள காய்கறித் தோட்டங்கள், கண்கவர் காட்சிமுனைகள், அரிதான தாவரங்கள், விலங்கினங்கள், அற்புதமான மலையேற்றப் பாதைகள், எண்ணிலடங்கா பாரம்பரிய இடங்கள், வியக்க வைக்கும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனக் காட்சிகள், பல்வேறு வண்ணங்களுடன் கூடிய வான்வெளிகள், மாசு இல்லாத சுற்றுச்சூழல், மூடுபனி, மேகக் கூட்டங்கள் ஆகியவற்றுடன் கூடிய நீலகிரி மாவட்டம் பார்பவர்களுக்கு விருந்தளிக்கக்கூடிய, மனதிற்கு இதமளிக்கக்கூடிய இடமாக உள்ளது.

மேலும் வாசிக்க…

மாவட்ட விவரங்கள்

பொது :
மாவட்டம் : நீலகிரி
தலைமையகம் : உதகமண்டலம்
மாநிலம் : தமிழ்நாடு

 

பரப்பளவு :
மொத்தம் : 2545 ச.கி.மீ

 

மக்கள்தொகை :
மொத்தம் : 7,35,394
ஆண்கள் : 3,60,143
பெண்கள்: 3,75,251