செ.வெ.எண்:173- முதல் நிலை தேர்தல் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை சீரற்றமயமாக்கல் (Randomization) – 23.03.2026
வெளியிடப்பட்ட தேதி : 23/03/2026
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளை ஒதுக்கீடு செய்வதற்காக, முதல் நிலை சமவாய்ப்புக்குட்படுத்தும் நடைமுறை 23.03.2026 ஆம் நாளன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் நடத்தப்பட்டது.
போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பின்னர், முதல் சமவாய்ப்புக்குட்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் பட்டியல் போட்டியிடும் அனைத்துப் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ,ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 100KB)
