செ.வெ.எண்:206- தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்–2026-ஐ முன்னிட்டு வாக்குப்பதிவு நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்படமாட்டாது
வெளியிடப்பட்ட தேதி : 16/04/2026
நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் எப்.எல்.1 (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள், எப்.எல்.2(FL2) கிளப் பார்கள், எப்.எல்.3(FL3) ஓட்டல் பார்கள் மற்றும் எப்.எல்.3ஏ(FL3A) ஆகியவற்றில், தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்–2026-ஐ முன்னிட்டு எதிர்வரும், 21.04.2026 அன்று காலை 10.00 மணி முதல் 23.04.2026 (வாக்குப்பதிவு நாள்) அன்று நள்ளிரவு வரையிலும், மேலும், 04.05.2026 (வாக்கு எண்ணிக்கை நாள்) அன்றும் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது எனவும், மேற்படி நாளில் கட்டாயமாக டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், கிளப்கள், ஓட்டல் பார்கள் தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.(PDF 72KB)