செ.வெ.எண்:319- மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்
வெளியிடப்பட்ட தேதி : 29/06/2026
நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கூடலூர் சுங்கம் எஸ்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்த திருமதி.ராதா என்பவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து இறந்தவரின் உடலுக்கு அரசு மரியாதை செய்யும் விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நாராயணன் அவர்கள் இன்று (29.06.2026) மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். (PDF 44KB )