செ.வெ.எண்:503- அஞ்சல் துறையின் வாடிக்கையாளர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 14.10.2026 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 07/10/2026

அஞ்சல் துறையின் வாடிக்கையாளர்களின் குறைகள் மாதம் ஒரு முறை நேரடியாகக் கேட்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுத்து வரப்படுகின்றன. அக்டோபர் 2026 மாதத்திற்கான டாக் அதாலத் வாடிக்கையாளர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நீலகிரி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 14.10.2026 அன்று 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. (PDF 109KB)