செ.வெ.எண்:572 – தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20.11.2026 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 16/11/2026

நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 20.11.2026 (வெள்ளிக் கிழமை) அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடத்தப்படவுள்ளது. (PDF 72KB)