செ.வெ.எண்:584 – கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி.செ.கமலி அவர்கள் 23 புதிய திட்டபணிகளை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 25/11/2026
நீலகிரி மாவட்டம், கூடலூர் ஜானகி அம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.13.84 கோடி மதிப்பில் முடிவுற்ற 23 புதிய திட்டபணிகளை, மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி.செ.கமலி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று (25.11.2026) திறந்து வைத்து, 93 பயனாளிகளுக்கு ரூ.80.83 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 57KB)
