செ.வெ.எண்:590- நீலகிரி மாவட்ட தேயிலை மற்றும் மலைக்காய்கறி விவசாயிகளுக்கான குளிர்கால பயிர் பாதுகாப்பு வழிகாட்டி
வெளியிடப்பட்ட தேதி : 26/11/2026
நீலகிரி மாவட்டத்தில் சுமார் 73,406 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் தேயிலை (56,320 ஹெக்டேர்) மற்றும் மலைக்காய்கறிகளை (7,001 ஹெக்டேர்) குளிர்கால வானிலை மாற்றங்களிலிருந்து பாதுகாக்க வேளாண்மை அறிவியல் நிலையம் (TNAU), நீலகிரி முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளது. டிசம்பர் மாத அடர்ந்த பனிமூட்டம் மற்றும் குளிர்ந்த இரவுகளாலும் (14–19°c) ஜனவரி முதல் மார்ச் வரையிலான வறண்ட பகல் வெயில் மற்றும் இரவு உறைபனியாலும் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. (PDF 76KB)