செ.வெ.எண்:170- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 – யை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 20/03/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 – யை – முன்னிட்டு, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் குன்னூர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை, 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி பொது பார்வையாளர் திரு. எஸ். ஹரீஷ் இ.ஆ.ப அவர்கள், 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி செலவு கண்காணிப்பு பார்வையாளர் திரு. வைபவ் மாதவ் ராவ் ஐ.ஆர்.எஸ் அவர்கள் ஆகியோர், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், கொடியசைத்து தொடங்கி வைத்து, சுமார் 1.5 கி.மீ தூரம் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டார்கள்.(PDF 118KB)
