செ.வெ.எண்:171- நீலகிரி மாவட்டத்தில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை சீரற்றமயமாக்கல் (Randomization) 23.03.2026 அன்று நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 20/03/2026
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 108 உதகமண்டலம், 109 கூடலூர் (தனி), 110 குன்னூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை சீரற்றமயமாக்கல் (Randomization) முறையில் பிரித்து வழங்கும் நிகழ்வு வருகின்ற 23.03.2026 காலை 10.00 மணியளவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் (பழைய கட்டிடம்) அலுவலகத்தில் நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையிலும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையிலும் நடைபெறும் என்பதை தொடர்புகொள்ளுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.(PDF 269KB)