செ.வெ.எண்:186- தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல், 2026 -ஐ முன்னிட்டு வாக்காளர்கள் தங்களது அடையாள ஆவணங்களை கட்டாயம் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 03/04/2026
நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல், 2026 -ஐ முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது அடையாள ஆவணங்களை சரிபார்த்து, வாக்களிக்கும் நாளில் கட்டாயம் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், தேர்தல் நடைபெறும் நாளில் ஒழுங்கும், அமைதியும் காத்திட அனைவரும் ஒத்துழைக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 318KB)