செ.வெ.எண்:476- “பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி” திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 24/09/2026
பிரதம மந்திரியின் கௌரவ உதவித் தொகை திட்டத்தில் மத்திய அரசால் விவசாய குடும்பத்திற்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000/-(ரூபாய் இரண்டாயிரம் மட்டும்) உதவித்தொகை என ஆண்டுக்கு மூன்று தவணையாக ரூ.6000/-(ரூபாய் ஆறாயிரம் மட்டும்) வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் பலர் தங்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்கப்படாமலும் e-KYC செய்யப்படாமலும், ஆதார் எண் இணைப்பு மற்றும் e-KYC நிலுவையிலும், மேலும் பல FR பதிவுகள் செய்யப்படாமலும் நிலுவையில் உள்ளதாக தெரியவருகிறது. பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள விவசாயிகள் தாமாகவே முன்வந்து தங்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி . லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.. அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 42KB)