செ.வெ.எண்:512- ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறித்தவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 09/10/2026

தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறித்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் 550 கிறித்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000/- வீதமும், 50 கன்னியாஸ்திரிகள் / அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000/- வீதமும் ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறித்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. (PDF 63KB)