தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு மின்னணு காலச் சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன
வெளியிடப்பட்ட தேதி : 26/03/2026
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி முன்னிலையில் , தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கும் இன்று மின்னணு காலச் சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்த மின்னணு காலச் சீட்டுகள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்திற்காக தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பு நேரத்தைப் பெற வழி வகை செய்கின்றன. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் ஆணையம் வெளியிட்டுள்ள நடைமுறை அறிவுறுத்தல்களுக்கு உட்பட்டு முறையாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.(PDF 162KB)