மூடு

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்,

கார்டன் சாலை, உதகமண்டலம்- 643001.

தொலைபேசி எண்:- 0423-2440725

மின்னஞ்சல்:- ddawonlg[at]gmail[dot]com

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள்

வ.எண் திட்டத்தின் பெயர்
அ) கண்டறிதல்
ஆ) ஆரம்ப நிலை பயிற்சி மையம்
இ) சிறப்புக் கல்வி
ஈ) பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு
உ) கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு
ஊ) மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள்
எ) பராமரிப்பு உதவித்தொகை
ஏ) திருமண நிதியுதவி
ஐ) இல்லங்கள்
ஒ) மாற்றத்திறனாளிகளுக்கான பேருந்து பயண சலுகை
ஓ) மற்ற திட்டங்கள்
ஒள) தமிழ்நாடு மாற்றுத்திறாளிகள் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சமூகநல பாதுகாப்பு திட்டங்கள்
அ) கண்டறிதல்
வ.எண் திட்டம் படிவம்/பயன்பெறும் வழிவகை
1 மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (40 சதவீதத்திற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது) மற்றும் மாற்றுத் திறனாளிகள் நல வாரிய சான்றிதழ் (10 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது)

ஒவ்வொரு வெள்ளி கிழமைகளிலும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம்  மற்றும் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின் தேசிய அடையள அட்டை  வழங்கப்படுகிறது.

தேவையான சான்றுகள்: 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, ரேசன் கார்டு மற்றும் அதன் நகல்

படிவம் (PDF 55KB)  
2 மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம்(UDID)

மாற்றுத் திறனாளி மருத்துவ சான்றிதழ், ஆதாhர் அட்டை, பாஸ்போர்ட்சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரை தொடர்பு கொள்ளவும்.

www.svanlambancard.gov.in
3 21 வகை மாற்றுத் திறனாளிகள்
1.கண் பார்வையின்மை 2.குறை பார்வையின்மை 3.தொழு நோயிலிருந்து குணமடைந்தோர்  4.செவிதிறன்; குறைபாடு 5.கை கால் இயக்க குறைபாடு 6.குள்ளத் தன்மை  7.அறிவுசார் குறைபாடு (மனவளர்ச்சி குன்றியவர்) 8.மனநோய் 9.புறஉலக சிந்தனையற்றவர் 10.மூளை முடக்கு வாத பாதிப்பு 11.தசை சிதைவு நோய் 12.நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு 13.குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு 14.திசு பண்முகக் கடினமாதல் 15.பேச்சு மற்றும் மொழித் திறன் குறைபாடு 16.இரத்த அழிவு சோகை 17.இரத்த உறையாமை அல்லது இரத்த ஒழுகு குறைபாடு 18.அரிவாளனு இரத்த சோகை 19.அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர்  20 .நடுக்கு வாதம் 21. பல்வகை குறைபாடு
பட்டியல் (PDF 46KB) 
ஆ) ஆரம்ப நிலை பயிற்சி மையம்
வ.எண் திட்டம் படிவம்/பயன்பெறும் வழிவகை
1 செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் சாந்தி நீதி கேந்திரா, சென்ட்லூர்ஸ் சர்ச் சாலை, கோத்தகிரி.

தொலைபேசி:- 04266-273187

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், நீலகிரி
2 அறிவுசார் குறைபாடு குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் நாயல்ஸ் கோன் அறக்கட்டளை, 3-1079, புத்தூர் வயல் ரோடு, கம்மாத்தி, ஸ்ரீமதுரை(அ) கூடலூர்.

தொலைபேசி:-04262-226256

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், நீலகிரி
இ) சிறப்புக் கல்வி
வ.எண் திட்டம் படிவம்/பயன்பெறும் வழிவகை
1 கல்வி உதவித்தொகை (1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை )  ரூ.1000 முதல் ரூ.3000 வரை படிவம் (PDF 137KB)
2 கல்வி உதவித்தொகை (9ஆம் வகுப்பு  12ம் வகுப்பு  மற்றும் ஐ.டி.ஐ.  வரை) ரூ.4000 படிவம் (PDF 210KB)
3. கல்வி உதவித்தொகை ( பட்ட படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு  வரை) ரூ.6000 முதல் ரூ.7000 வரை படிவம் (PDF 193KB)
4 பார்வைத்திறன் குறையுடையோருக்கான வாசிப்பாளர் உதவித்தொகை ரூ.3000 முதல் ரூ.6000 வரை (9ஆம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை) படிவம் (PDF 193KB)
5 மத்திய அரசு கல்வி உதவித்தொகை ரூ.7000 முதல் 1 லட்சம் வரை 9ம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி கல்வி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். https://scholarships.gov.in
6 செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்காக பட்டப் படிப்பு வகுப்புகள் செயல்படுத்தல் பி.காம் மற்றும் பி.சி.ஏ ஆகிய பட்டப் படிப்புகள் மாநில கல்லூரி சென்னை 5 நடத்தப்படுகிறது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், நீலகிரி
7 சட்டக் கல்வி படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு  சட்டக் கல்வி படித்த ரூ.10000 உதவித்தொகை படிவம் (PDF 99KB)
8  இடை நிற்றலை தவிர்க்கும் பொருட்டு ஊக்கத்தொகை மற்றும் பள்ளிப்படிப்பை தொடரும் பொருட்டு அரசு செவித்திறன் குறைபாடுயோருக்கான உயர்நிலை பள்ளி,  கார்டன் சாலை, உதகமண்டலம். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், நீலகிரி
9 அரசு அங்கிகாரம் பெற்று 5 வருடங்கள் நிறைவடைந்த சிறப்பு பள்ளிகளில் பணிபுபுரியும்  3  சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மானியம் மாதம்  ரூ. 14000  வழங்கப்படுகிறது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், நீலகிரி
ஈ) பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு
வ.எண் திட்டம் படிவம்/பயன்பெறும் வழிவகை
1 மல்டிமீடியா போட்டோகிரபி எடிட்டிங் ஆகிய பயிற்சிகள் தேசிய திரைப்பட தொழிநூட் பயிற்சி நிறுவனம் எழும்பூர்  சென்னை மூலமாக வழங்கப்படுகிறது..  தொலைபேசி எண்கள்:- 044 28191203 , 044 28192506 மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், நீலகிரி
2 பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கான  பொருத்துநர் பயிற்சி அரசினர் தொழிற் பயிற்சி நிறுவனம்  கிண்டி, சென்னை உளுந்தூர்பேட்டை மற்றும்  நாகர்கோவில் ஆகிய இடங்களில் வழங்கப்படுகிறது. www.skilltraining.tn.gov.in/DET
3 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்பற்றோர் நிவாரண உதவி தொகை மாதம் ரூ.600 முதல் ரூ.1000 வரை 18 வயதிற்றகு மேற்பட்ட  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1 வருடம் பதிவு முடிந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகம், பிங்கர்போஸ்ட், உதகமண்டலம். தொலைபேசி எண்:- 0423-244044

படிவம்
4 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு சுய வேலைவாய்ப்பு பரிந்துரையுடன் மூன்றில்  ஒரு பங்கு அல்லது அதிகபட்சம் ரூ.25000 மானியம்  45 வயது வரை உடையவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. படிவம் (PDF 115KB)
5 மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம் 18 வயதிற்கு மேற்பட்ட இயக்கத்திறன் குறைபாடுடையவர்கள்  செவிதிறன் குறையுடையவர்கள் மிதமான அறிவுசார் குறைபாடு உடையவர்கள்  75 விழுக்காட்டிற்கு மேல் கடுமையாக பாதிக்கப்பட்ட அறிவுசார் குறைபாடு உடையவர்களின் பெற்றோர் படிவம் (PDF 112KB)
6 தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கூட்டுறவு வங்கிகளில் வட்டி இல்லா கடன் உதவி மாவட்ட மத்திய  கூட்டுறவு வங்கி உதகமண்டலம் மற்றும்  அருகாமையில்  உள்ள நகர மற்றும் கிராம கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. படிவம்
7 திறன் மேம்பாட்டு பயிற்சி www.skilltraining.tn.gov.in/DET
8 வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கும் திட்டம் (UYEGP) மாற்றுத்திறனாளிகளுக்கு 30  சதவீதம் மானியம். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம், எல்கில் ரோடு, உதகமண்டலம். தொலைபேசி எண்:-0423-2443947 https://www.msmeonline.tn.gov.in /uyegp/
9 பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம் (PMEGP)  மாற்றுத்திறனாளிகளுக்கு 30%  சதவீகித மானியம் முதல் 40%  வரை மானியம் வழங்குதல்  மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம், எல்கில் ரோடு, உதகமண்டலம். தொலைபேசி எண்:-0423-2443947 www.kviconline.gov.in/pmegp.jsp
10 பார்வையற்றவர்களுக்கான புத்தக கட்டுனர் பயிற்சி  அரசு பார்வையற்றோருக்கான மேல்நிலை பள்ளி பூவிருந்தவல்லியில் வழங்கப்படுகிறது.   தொலைபேசி எண் 044-26272080 மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், நீலகிரி
11 மாற்றுத்திறனாளிகளுக்கு சுயவேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் ஆவின் விற்பனை மையம் ரூ.50000 மானியம் மற்றும் முன் வைப்பு தொகை. படிவம்
உ) கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு
வ.எண் திட்டம் படிவம்/பயன்பெறும் வழிவகை
1 மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி நிறுவனங்களில் 5 சதவிகித இட ஒதுக்கீடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், நீலகிரி
2 இந்திய குடிமைப்பணி முதன்மை தேர்வு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-1 முதன்மைத் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத்தொகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், நீலகிரி
3 வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுத் துறைகள்  மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் 4%  இட ஒதுக்கீடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், நீலகிரி
ஊ) மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள்
வ.எண் திட்டம் படிவம்/பயன்பெறும் வழிவகை
1 மூன்று சக்கர சைக்கிள் படிவம் (PDF 151KB)
2 சக்கர நாற்காலி படிவம் (PDF 151KB)
3 கால் தாங்கிகள் மற்றும் ஊன்றுகோல்கள் படிவம் (PDF 151KB)
4 செயற்கை அவயங்கள் படிவம் (PDF 151KB)
5 அதீத நவீன செயற்கை அவயங்கள் படிவம் (PDF 151KB)
6 மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான மாற்றி வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலி படிவம் (PDF 151KB)
7 நடை பயிற்சி உபகரணம்  (ரோலேடார்.   / கார்னர் சேர்) படிவம் (PDF 151KB)
8 இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் படிவம் (PDF 151KB)
9 மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலி  முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு இரண்டு கால்கள்  செயல் இழந்தவர்கள் மற்றும் தசை சிதைவு நோயால் பாதிக்க்பட்டவர்கள் படிவம் (PDF 151KB)
10 பார்வையற்றவர்களுக்கான கருப்பு கண்ணாடிகள் படிவம் (PDF 151KB)
11 பிரெய்லி கை கடிகாரங்கள் படிவம் (PDF 151KB)
12 பார்வை திறன் குறைபாடுடையவர்களுக்கு உருபெருக்கி படிவம் (PDF 151KB)
13  ஸ்மார்ட்  மடக்கு ஊன்றுகோல் படிவம்
14 காதுக்கு பின் அணியும் காதொலிக் கருவிகள் படிவம்
15 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நடமாடும் சிகிச்சை பிரிவு மூலம் மறுவாழ்வுப் பணிகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், நீலகிரி
எ) பராமரிப்பு உதவித்தொகை
வ.எண் திட்டம் படிவம்/பயன்பெறும் வழிவகை
1 40 விழுக்காட்டிற்கு மேல் உடைய அறிவுசார் குறைபாடுடையோருக்கான பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ 1500/- படிவம் (PDF 158KB)
2 75 விழுக்காட்டிற்கு மேல் உடைய கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான  பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ 1500/- படிவம் (PDF 158KB)
3 40 விழுக்காட்டிற்கு மேல் உடைய தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டாருக்கான பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ 1500/- படிவம் (PDF 158KB)
4 40 விழுக்காட்டிற்கு மேல் உடைய தொழுநோய் பாதிக்கப்பட்டாருக்கான பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ 1500/- படிவம் (PDF 158KB)
ஏ) திருமண நிதியுதவி
வ.எண் திட்டம் படிவம்/பயன்பெறும் வழிவகை
1 பார்வையற்றவரை திருமணம் செய்து கொள்ளும் பார்வையுள்ள நபருக்கு நிதியுதவி படிவம் (PDF 338KB)
2 இயக்கத்திறன் குறைபாடுடைய மாற்றுதிறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு திருமண நிதியுதவி படிவம் (PDF 338KB)
3 செவிதிறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு திருமண நிதியுதவி படிவம் (PDF 338KB)
4 மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத்திறனாளிக்கு திருமண நிதியுதவி படிவம் (PDF 338KB)
(திருமண உதவி திட்டத்தின் கீழ் பட்டம் மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50000 நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் பட்டம் பெறாதவர்களுக்கு ரூ.25000 நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம்)
ஐ) இல்லங்கள்
வ.எண் திட்டம் படிவம்/பயன்பெறும் வழிவகை
1 14 வயதுக் மேற்பட்ட அறிவுசார் குறைபாடுடையோர்களுக்கான  தொழிற் பயிற்சியுடன் கூடிய பெண்கள் இல்லம்

நாயல்ஸ் கோன் அறக்கட்டளை, 3-1079, புத்தூர் வயல் ரோடு, கம்மாத்தி, ஸ்ரீமதுரை (அ) கூடலூர்.

தொலைபேசி எண்:-04262-226256

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், நீலகிரி
ஒ) மாற்றத்திறனாளிகளுக்கான பேருந்து பயண சலுகை  
வ.எண் திட்டம் படிவம்/பயன்பெறும் வழிவகை
1 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மாவட்டம் முழுவதும் அரசு பேருந்துகளில் சென்று வர இலவசப்பயணச்சலுகை படிவம் (PDF 198KB)
2 இருப்பிடத்திலிருந்து சிறப்பு பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு  சென்று வர இலவசப் பயணச்சலுகை படிவம் (PDF 247KB)
3 மாற்றத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வைத்துள்ள அனைத்த மாற்றுத்திறனாளிகளும் தமிழ் நாடு முழுவதும் வெளயூர் அரசு பேருந்துகளில் சென்று வர 75% பேருந்து சலுகை மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகலினை பயணம் மேற்கொள்ளும்போது வெளியூர் அரசு பேருந்து நடத்துநரிடம் வழங்கி பயன் பெற வேண்டும். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், நீலகிரி
4 கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் துனையாளர் ஒருவருடன் வெளியூர் அரசு பேருந்துகளில் சென்று வர 75% பேருந்து சலுகை மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் மற்றும் உடன்ஆள் மருத்துவர் சான்று பயணம் மேற்கொள்ளும்போது வெளியூர் அரசு பேருந்து நடத்துனரிடம் வழங்கி பயன் பெற வேண்டும். படிவம் (PDF 211KB)
ஓ) மற்ற திட்டங்கள்
வ.எண் திட்டம் படிவம்/பயன்பெறும் வழிவகை
1 மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் RPWD Act 2016ன் கீழ் புகார்களை பதிவு செய்தல் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குநர், காமராஜர் சாலை. சென்னை- 600 005.
2 தேசிய அறக்கட்டளை சட்டம் 1999ன் கீழ் சிறப்பு வகை மாற்றுத்திறனாளிகளுக்கு காப்பாளரை நியமித்தல்
18 வயதிற்கு மேற்பட்ட அறிசார் குறைபாடு உடையோர் புற உலக சிந்தனையற்றவர் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வகை மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு தேசிய அறக்கட்டளை தொண்டு நிறுவன உறுப்பினர் Bethel Institute Of Basic Level Education, Ph.No:9442731519
http://www.thenationaltrust.gov.in/ content/innerpage/guardianship.php
3 வரையறுக்கப்பட்ட பாதுகாவலர் சான்று வழங்குதல் கடுமையாக பாதிக்கபட்ட தேசிய அறக்கட்டளை சட்டத்திற்கு உட்படாத மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையலான குழு மூலம் பரிசீலனை செய்து வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் நீலகிரி படிவம்
4 அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் நாள் விழா  மாநில அரசு விருதுகள்  மாற்றுத் திறனாளிகள்  நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு  வழங்கப்படுகிறது. படிவம் (PDF 583KB)
5 அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் நாள் விழா  மத்திய அரசு  விருதுகள்  மாற்றுத் திறனாளிகள்  நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு  வழங்கப்படுகிறது. படிவம் (PDF 93KB)
6 சுதந்திர தின விழா மாநில அரசு விருதுகள்;  மாற்றுத் திறனாளிகள்  நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு  வழங்கப்படுகிறது. படிவம் (PDF 60KB)
7 முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ரூ.5.00 இலட்சம் வருமான உச்ச வரம்பின்றி அனைதது மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினர் அனைவரும் பயன்பெறலாம். திட்ட அலுவலர் மாண்புமிகு முதலமைச்சரின் விhpவான காப்பீடு திட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீலகிரி. www.cmchistn.com
8 பணிபுரியும்  மகளீர் மாற்றுத்திறனாளிகளுக்கு அம்மா பெட்ரோல் ஸ்கூட்டர் வாங்கிட ரூ 31250/-  மானியம் வழங்குதல்   திட்ட இயக்குனர் மகளீர் திட்ட அலுவலகம், மாவட்ட ஆட்சியர்  கூடுதல் வளாகம், நீலகிரி. www.tamilnadumahalir.org/tnatws.html
ஒள) தமிழ்நாடு மாற்றுத்திறாளிகள் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சமூகநல பாதுகாப்பு திட்டங்கள்
வ.எண் திட்டம் படிவம்/பயன்பெறும் வழிவகை
1 விபத்து மரணம் ரூ.1.00 இலட்சம் படிவம் (PDF 102 KB) 
2 விபத்து ஊனம் ரூ 25000 படிவம் (PDF 84 KB) 
3 ஈமசடங்கு செலவுகள்   மற்றும்  இயற்கை மரணம் ரூ.17000 படிவம் (PDF 98 KB) 
4 கல்வி உதவித்தொகை ரூ.1000 முதல் ரூ.6000 வரை படிவம் (PDF 142 KB)  
5 திருமண நிதியுதவி ரூ.2000 படிவம் (PDF 95 KB) 
6 பெண் மாற்றுத்திறனாளிகளுக்கான மகப்பேரு / அறுவை சிகிச்சை ரூ.6000, கருச்சிதைவு கருக்கலைப்பிற்கான உதவி ரூ.3000 படிவம் (PDF 113 KB) 
7 மூக்குக் கண்ணாடி செலவினம் ஈடு செய்தல் ரூ.500 படிவம் (PDF 66 KB)