செ.வெ.எண்:303- மாவட்ட கால்நடைப் பண்ணையில் பொலிகாளைகள் 30.06.2026 அன்று காலை 11.00 மணியளவில் ஏலக்குழுவின் மூலம் பொது ஏலம் விடப்படும்.
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2026உதகமண்டலம், மாவட்ட கால்நடைப் பண்ணையில் கழிவு செய்யப்பட்ட 20 எண்ணிக்கையிலான பொலிகாளைகள் எதிர்வரும் 30.06.2026 அன்று காலை 11.00 மணியளவில் இப்பண்ணை வளாகத்தில் ஏலக்குழுவின் மூலம் பொது ஏலம் விடப்படும். (PDF 418KB )
மேலும் பலசெ.வெ.எண்:302- தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2026தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள் குறித்த பத்திரிக்கைச் செய்தி. (PDF 435KB )
மேலும் பலசெ.வெ.எண்:301- குன்னூர் பழவியல் நிலையத்தில் உள்ளூர் பழ நாற்றுகள் நடவு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2026நீலகிரி மாவட்டத்தை தாயகமாக கொண்ட பழங்களின் சாகுபடியை புதுப்பிக்கும் நோக்கில் குன்னூர் பழவியல் நிலையத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் உள்ளூர் பழ நாற்றுகள் நடவு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் (17.06.2026) அன்று துவங்கி வைத்தார். (PDF 96KB )
மேலும் பலசெ.வெ.எண்:300- தும்மனட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது -17.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், தும்மனட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள் 43 பயனாளிகளுக்கு ரூ.91.78 இலட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று (17.06.2026) வழங்கினார். (PDF 113KB )
மேலும் பலசெ.வெ.எண்:299- பழங்குடியினர் கிராமங்களில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் மற்றும் முடிவுற்ற பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், இன்று (16.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத்திலுள்ள பழங்குடியினர் கிராமங்களில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் மற்றும் முடிவுற்ற பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், இன்று (16.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 107KB )
மேலும் பலசெ.வெ.எண்:298- கால்நடை வளர்ப்போர்களின் ஆதார் எண், கைபேசி எண் மற்றும் கால்நடை விவரங்கள் போன்ற தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026இந்திய அரசாங்கத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய மின்னணு கால்நடை இயக்கம் (National Digital Livestock Mission) மற்றும் தமிழக அரசும் இணைந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கால்நடை வளர்ப்போர்களின் ஆதார் எண், கைபேசி எண் மற்றும் கால்நடை விவரங்கள் போன்ற தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. (PDF 72KB )
மேலும் பலசெ.வெ.எண்:297- தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 19.06.2026 வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026உதகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 19.06.2026 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கூடுதல் ஆட்சியர் வளாகம், பிங்கர்போஸ்ட், உதகையில் நடத்தப்படவுள்ளது. (PDF 69KB )
மேலும் பலசெ.வெ.எண்:296- 2026 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 16/06/20262026 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (PDF 573KB )
மேலும் பலசெ.வெ.எண்:295- “கலைஞர் கைவினைத் திட்டத்தில்” தொழிற்கடன் பெற்று தொழில் துவங்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அழைப்பு!!!
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026நீலகிரி மாவட்டத்தில் கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் உள்ளோருக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு “கலைஞர் கைவினைத்திட்டம்” மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தகுதியான பொதுமக்கள் இத்திட்டத்தின் மூலம் புதிய தொழில் துவங்கவும், தொழிலை மேம்படுத்தவும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள். (PDF 269KB )
மேலும் பலசெ.வெ.எண்:294- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான Computer – Aided Design (CAD). Computer – Aided Manufacturing (CAM) Course and Industrial Automation Course போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான Computer – Aided Design (CAD). Computer – Aided Manufacturing (CAM) Course and Industrial Automation Course போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. (PDF 416KB )
மேலும் பல