மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்:255- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026

நீலகிரி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 34KB )

மேலும் பல

செ.வெ.எண்:254- அஞ்சல் துறையின் வாடிக்கையாளர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 01.06.2026 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026

வாடிக்கையாளர்களின் குறைகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நேரடியாகக்  கேட்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுத்து வரப்படுகின்றன. 30.06.2026 அன்று முடிவடையும் காலாண்டிற்கான டாக் அதாலத் வாடிக்கையாளர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நீலகிரி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 01.06.2026 அன்று 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது. அஞ்சலக சேவை சம்பந்தமாக புகார் மற்றும் குறைகள் ஏதேனும் இருப்பின் கடிதம் மூலமாக, அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர், நீலகிரி கோட்டம், உதகமண்டலம் – 643001என்ற முகவரிக்கு உறை மேல் […]

மேலும் பல

செ.வெ.எண்:253- திருக்குறள் திருப்பணிகள் திட்டம் நிறைவு விழா இன்று (25.05.2026) உதகை, சி.எஸ்.ஐ (சி.எம்.எம்) மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்டந்தோறும் திருக்குறள் திருப்பணிகள் திட்டம் 2025ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, பொதுமக்களிடையே திருக்குறள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று மையங்களில் நுண்பயிற்சி வகுப்புகள் திட்டமிடப்பட்டு 30 வாரங்கள் தொடர் பயிற்சியளிக்கப்பட்டது.அதன் நிறைவு விழா இன்று (25.05.2026) உதகை, சி.எஸ்.ஐ (சி.எம்.எம்) மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது.  (PDF 48KB )

மேலும் பல

செ.வெ.எண்:252- தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் மூலம் நலத்திட்ட வழங்கப்படும் உதவிகள்

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் மூலம் நலத்திட்ட வழங்கப்படும் உதவிகள் பற்றிய செய்தி வெளியீடு. (PDF 48KB )

மேலும் பல

செ.வெ.எண்:251- தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் படிப்பு [CPEI] ஜீன் 2025 முதல் தொடங்கவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

தமிழ்நாடு அரசின் குறுசிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் MSME துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது தமிழ்நாட்டில் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைத்தலுக்கான கலாச்சாரத்தை வளர்க்கவும், உள்ளூர் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கவும செயல்பட்டு வருகிறது. தற்போது, அகமதாபாத்தில் உள்ள இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்துடன் (EDII AHMEDABAD) இணைந்து மூன்றாம் ஆண்டிற்கான, ஓராண்டு தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்க சான்றிதழ் கல்விக்கான (BATCH 3) சேர்க்கையை தொடங்கியுள்ளது. (PDF 61KB ).

மேலும் பல

செ.வெ.எண்:250- 2026-2027 ஆம் கல்வியாண்டில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி உதகையில் மாணவ /மாணவியர்கள் சேர்க்கை

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி தொலைபேசி 0423-2440725, 0423-2450700 மற்றும் அலைபேசி 9865847536 எண்ணில் தொடர்பு கொண்டு உதகை கார்டன் சாலையில் அமைந்துள்ள செவித்திறன் குறையுடையோக்கான அரசு உயர்நிலைப்பள்ளியில் சேர்த்து பயன் பெறுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 41KB )

மேலும் பல

செ.வெ.எண்.249- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (25.05.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 130 மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 41KB )

மேலும் பல

செ.வெ.எண்:248- குன்னூர் சிம்பூங்காவில் பழக்கண்காட்சி வருகின்ற (புதன்கிழமை) 27.05.2026 முதல் 30.05.2026 வரை நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

குன்னூர் சிம்பூங்காவில் பழக்கண்காட்சி வருகின்ற (புதன்கிழமை) 27.05.2026 முதல் 30.05.2026 வரை நடைபெறவுள்ளது. பழக்கண்காட்சியினை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கண்டுகளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 33KB )

மேலும் பல

செ.வெ.எண்.247- குன்னூர் காட்டேரி பூங்காவில் மலைப்பயிர்கள் காட்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பூங்காவில் இன்று (22.05.2026) நடைபெற்ற 2வது மலைப்பயிர்கள் காட்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.(PDF 50KB)

மேலும் பல

செ.வெ.எண்.246- நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) 2026ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) 2026ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ள மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் காலம் 16.05.2026 முதல் 03.06.2026 வரை ஆகும். (PDF 75KB )

மேலும் பல