அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| நீலகிரி மாவட்டம், பழங்குடி அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு | தகுதியுள்ள நிறுவனங்களிடம் இருந்து, நீலகிரி மாவட்டம், உதகமண்டலம், பழங்குடி அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்புக்கு விலைப்பட்டியல் அழைப்பு விடுக்கப்படுகிறது |
12/09/2025 | 21/09/2025 | பார்க்க (167 KB) |
| வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான உபகரணங்கள் | இந்திய தேர்தல் ஆணையம், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு(BLO), வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான உபகரணங்கள்(BLO Kit) வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான உபகரணங்களில் பை, பதிவு புத்தகம், எழுத்துப்பொருட்கள், தொப்பி மற்றும் திருத்தம் செயல்பாட்டின் போது தேவையான பிற பொருட்கள் அடங்கலாம். ஆர்வமுள்ள வழங்குனர்கள் தங்கள் ஒப்பந்த்த்தப்புள்ளியை deo_nilgiris@yahoo.co.in மற்றும் deo-tnnlg@eci.gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். |
10/09/2025 | 17/09/2025 | பார்க்க (699 KB) |
| மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம், எமரால்டு பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் அமைக்க உத்தேசம் செய்யப்பட்டு வருகிறது. மேற்படி மனநல காப்பகத்தினை நடத்திட தகுதியின் அடிப்படையில் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் உரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
22/08/2025 | 30/08/2025 | பார்க்க (279 KB) |
| அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, நகர்புற நலவாழ்வு மையம் மற்றும் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, நகர்புற நலவாழ்வு மையம் மற்றும் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 18.08.2025 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. |
06/08/2025 | 18/08/2025 | பார்க்க (522 KB) |
| அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 05.08.2025 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. |
25/07/2025 | 05/08/2025 | பார்க்க (384 KB) |
| மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் | நீலகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 02.08.2025 அன்று பழங்குடியினர் பண்பாட்டு மையம், கார்டன் ரோடு உதகையில் நடைபெறவுள்ளது. |
02/08/2025 | 02/08/2025 | பார்க்க (38 KB) |
| ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | நீலகிரி மாவட்டம்; சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)-ற்கு கீழ்க்கண்ட பணியிடத்திற்கு பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளதால், பின்வரும் தகுதிகளுடன் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
22/07/2025 | 31/07/2025 | பார்க்க (54 KB) |
| நீலகிரி மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திட தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. | ‘நஷா முக்த் பாரத் அபியான்” (NMBA) திட்டத்தின் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திட தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் மற்றும் தகுதி வாய்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது விண்ணப்பத்துடன் கூடிய கருத்துருக்களை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், எண்:19, இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் வளாகம், பிங்கர் போஸ்ட், நீலகிரி மாவட்டம் என்ற முகவரிக்கு 19.07.2025க்குள் வந்து சேருமாறு அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். |
11/07/2025 | 19/07/2025 | பார்க்க (265 KB) |
| நீலகிரி மாவட்டத்தில் தொகுதி ஆரம்ப சுகாதார மையங்களில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஆலோசகர் (Tribal Counsellor) பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது | நீலகிரி மாவட்டத்தில் தொகுதி ஆரம்ப சுகாதார மையங்களில் (Block PHCs) ஆலோசகர் (Tribal Counsellor) பணியமர்த்தப்பட்டு மாவட்டத்தின் பழங்குடி தொகுதிகளில் உள்ள விரிவான பட்டியல் கேரியர்கள் / நோயுற்ற நபர்களை (Diseased person) மேற்பார்வையிட நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 01 ஆலோசகர் (Tribal Counsellor) பணியிடத்தை தோற்றுவித்து அந்த பணியிடங்களை தகுதியான பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஆலோசகர்களை (Tribal Counsellor) கொண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 18.7.2025 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. |
14/07/2025 | 18/07/2025 | பார்க்க (533 KB) |
| அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் நகர்புற நலவாழ்வு மையம் மற்றும் சித்தா ஆகிய இடங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் நகர்புற நலவாழ்வு மையம் மற்றும் சித்தா ஆகிய இடங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள 27.06.2025 அன்றுமாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. |
13/06/2025 | 27/06/2025 | பார்க்க (528 KB) |