மூடு

வேலைவாய்ப்புகள்

வேலைவாய்ப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

2015ம் ஆண்டின் இளைஞர் நீதிச்(குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுக்களுக்கு தலைவர் (ம) உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

21/11/2024 04/12/2024 பார்க்க (593 KB)
வீடற்ற நகர்ப்புற ஏழைகளுக்கு தங்கும் விடுதியினை நடத்திட அரசு சாரா அமைப்பினர் மூலம் உரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண்.27, முள்ளிக்கொரை பகுதியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டம் DAY – NULM Shelter for Urban Homeless வீடற்ற நகர்ப்புற ஏழைகளுக்கு தங்கும் விடுதியினை நடத்திட அரசு சாரா அமைப்பினர் மூலம் உரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

03/10/2024 08/10/2024 பார்க்க (384 KB)
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் போதை மீட்பு மையத்தில் வேலைவாய்ப்பு

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் போதை மீட்பு மையத்தில் உள்ள பதவிகளில் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிப்புரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட  விண்ணப்பங்கள் 31.08.2024 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

17/08/2024 31/08/2024 பார்க்க (411 KB)
நீலகிரி மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம் – வேலைவாய்ப்பு

நீலகிரி மாவட்டத்தில் ஓமியோபதித்துறை , அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள  பதவிகளில் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிப்புரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட  விண்ணப்பங்கள் 14.08.2024 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

29/07/2024 14/08/2024 பார்க்க (942 KB)
தணிக்கையாளர் சேர்பட்டியல்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சமுதாய அமைப்புகள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம், மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் தணிக்கை செய்திடும் பொருட்டு தணிக்கையாளர்களை தேர்வு செய்வதற்கான விதிமுறைகள் வரப்பெற்றுள்ளது.

02/08/2024 12/08/2024 பார்க்க (1 MB)
தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்கள்

நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உதகை மு.பாலாடா ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு ஆசிரியர் தற்காலிகமாக தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

30/07/2024 10/08/2024 பார்க்க (32 KB)
ஓட்டுநர் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் நிதி உதவியோடு செயல்படுத்தப்படும் நடமாடும் நம்பிக்கை மையம் வாகனத்திற்கு ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

30/07/2024 07/08/2024 பார்க்க (176 KB)
முதுநிலை ஆலோசகர் மற்றும் சமூக நல தனியாளர்

நீலகிரி மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)-க்கு முதுநிலை ஆலோசகர் மற்றும் சமூக நல தனியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளதால், தகுதிகளுடன் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

08/03/2024 22/03/2024 பார்க்க (194 KB)
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தால் 16.02.2024 அன்று உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

16/02/2024 16/02/2024 பார்க்க (109 KB)
திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் மற்றும் தகவல், கல்வி மற்றும் தொடர்பு ஆலோசகர்

ஊரக வளர்ச்சி அலகு, நீலகிரி மாவட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உதகமண்டலம் அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட திட்ட மேலாண்மை அலகு மற்றும் தகவல், கல்வி (ம) தொடர்பு குழு பிரிவுகளுக்கு ஒரு திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் மற்றும் இரண்டு தகவல், கல்வி மற்றும் தொடர்பு ஆலோசகர் பணியிடங்கள் வெளிநிரவல் முறை மூலம் தேர்ந்தெடுக்க தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

29/01/2024 06/02/2024 பார்க்க (39 KB)