மூடு

சிம்ஸ் பூங்கா

வழிகாட்டுதல்

குன்னூரிலுள்ள சிம்ஸ் பூங்கா 1874 ஆம் ஆண்டு துவக்கப்பெற்று செயல்பட்டு வருகிறது. இப்பூங்கா ரம்மியமான பள்ளதாக்கின் அடிவாரத்தில் கடல் மட்டத்திலிருந்து 1780 முதல் 1790 மீட்டர் உயரத்தில் அமைக்கப் பெற்றிருக்கிறது. 12.14 எக்டர் பரப்பில் மேடு பள்ளங்கள் உடைய நிலப்பகுதியுடனும் பல்வேறு விரும்பத்தக்க அம்சங்களுடனும் இப்பூங்கா அமைந்துள்ளது. நகரத்தின் ஈர்ப்புமிக்க மையப் பகுதியில் அமைந்துள்ளதால் பார்வையாளர் எவரும் இயற்கை எழில் கொஞ்சும் இப்பூங்காவினைப் பார்த்து மகிழும் வாய்ப்பினை நழுவ விடுவதில்லை.

இப்பூங்காவில் 86 தாவரக் குடும்பங்களை சார்ந்த 1200 வகையான தாவரங்கள் உள்ளன. மிக அரிதான மரங்கள் இப்பூங்காவில் காணப்படுகின்றன.

ஆண்டு தோறும் மே மாதத்தின் கடைசி வாரத்தில் சிம்ஸ் பூங்காவில் பழக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இது சுமார் 4 இலட்சம் பார்வையாளர்களை கவர்ந்திடும் நிகழ்ச்சியாக திகழ்கிறது.

புகைப்பட தொகுப்பு

  • சிம்ஸ் பூங்காவின் பிரதான நுழைவுவாயில்
  • சிம்ஸ் பூங்கா, குன்னூர்
  • சிம்ஸ் பூங்கா கண்ணாடி மாளிகையின் உட்புற காட்சி

அடைவது எப்படி:

வான் வழியாக

அருகிலுள்ளது கோயம்பத்தூர் விமான நிலையம்.

தொடர்வண்டி வழியாக

ஒரு மீட்டர் கேஜ் பாதை குன்னூர்யை மேட்டுப்பாளையத்துடன் இணைக்கிறது.

சாலை வழியாக

குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது