கால்நடை பராமரிப்புத்துறை
கால்நடையானது நிலமற்ற ஏழை விவசாயிகள் சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆகியோருக்கு வருவாய் ஈட்டவும் வேலைவாய்ப்பு சூழ்நிலையை உருவாக்கவும் குறிப்பாக சுயதொழில் மூலம் எண்ணற்ற கிராமப்புற மற்றும் நகர்புற மக்களில் பெரும்பாலான மகளிர் கால்நடை பராமரிப்பில் ஈடுபடவும் வழிவகுத்துள்ளது. புரதம் மிகுந்த ஊட்ட சத்து உணவான பால் முட்டை இறைச்சி ஆகியவை கால்நடை மூலம் பெறுகிறோம். ஒரு வட்டார மக்களின் சமூக கலாச்சார பின்னணியை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்
கால்நடைதுறை மாநிலத்தில் உள்ள கால்நடைகளின் பராமரிப்பு உற்பத்தி பெருக்கம் ஆகியவற்றை கண்காணிக்கிறது. இதைத் தவிர சமூகத்தில் பின் தங்கியுள்ள ஏழை ஒடுக்கப்பட்டுள்ள மக்களின் பொருளாதார உயர்வுக்கும் வளர்ச்சிக்கும் வெவ்வேறான திட்டங்களை நடைமுறைபடுத்துகிறது. மாநிலத்தில் பரவியுள்ள வெவ்வேறான கால்நடை துறைகள் மேற்கண்ட பணிகளை செய்கின்றன. துறையின் தொடர் நடவடிக்கைகள் மூலம் வளர்ச்சி திட்டங்களை நடைமுறை படுத்துவதுடன் நாட்டின் பொருளாதார சம சீர் நிலையை கால்நடை மற்றும் இயற்கைவளம் பேணிகாக்கிறது
பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி
பால்வளத்துறை நலிவடைந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய விவசாய பெருமக்களுக்கு வாழ்வாதாரத்தை தரக்கூடிய துறையாக மட்டுமல்லாது மக்களுக்கு சரிவிகித சத்துணவான பாலை உற்பத்தி செய்யும் உன்னதத் துறையாகவும் திகழ்கிறது. பால் உற்பத்தியில் பற்றாக்குறை நாடாக இருந்த இந்தியா தற்சமயம் தன்னிறைவடைந்து உலக அளவில் பால் உற்பத்தியில் முதலிடம் வகிப்பது பெருமைக்குரியதாகும். மாண்புமிகு முதல்வர் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் பால் உற்பத்தியில் தமிழகம் 8வது இடத்தை அடைந்து இரண்டாவது வெண்மைப் புரட்சியை நோக்கி விரைவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. 2012-2013 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பால் உற்பத்தி நாளொன்றுக்கு 1.82 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது.
நோக்கங்கள்
1. சிகிச்சை மற்றும் தடுப்பூசி மூலம் கால்நடைகள் மற்றும் கோழியினங்களை நோயிலிருந்து காப்பாற்றுதல்.
2. இனப்பெருக்க தொழில்நுட்பத்தின் மூலம் கால்நடைகளின் எண்ணிக்கையினை அதிகரித்தல்.
3. தொடர் ஆராய்ச்சியின் மூலம் சிறப்பான கால்நடை பராமரிப்பு நுட்பத்தினை உறுதிசெய்தல்
4. கல்வி மற்றும் பயிற்சியின் மூலம் தொழில்நுட்ப பணியாளர்களை உருவாக்குதல்.
5. கால்நடை பண்ணை மற்றும் கோழிப்பண்ணை அமைக்க ஊக்குவித்தல்.
துறையின் அமைப்பு
பிரிவுகள்
1. உதகமண்டலம்.
3 ஊராட்சி ஒன்றியங்கள் – உதகமண்டலம், குன்னூர் (ம) கோத்தகிரி.
2. கூடலூர்.
1 ஊராட்சி ஒன்றியம் – கூடலூர்.
சிறப்பு திட்டங்கள்
1. விலையில்லா வெள்ளாடுகள் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம்.
2. ஊரக புறக்கடை கோழிவளர்ப்பு திட்டம்.
3. மாநில தீவன அபிவிருத்தி திட்டம்.
4. சிறிய அளவிலான பால்பண்ணை திட்டம்
5. கால்நடை காப்பீட்டு திட்டம்.
பிற திட்டங்கள்
1. கோமாரி நோய் தடுப்பூசி திட்டம்.
2. கால்நடை பாதுகாப்பு திட்டம்.
3. மலடுநீக்க சிகிச்சை முகாம்.
4. கால்நடை கணக்கெடுப்பு திட்டம்.
5. கோழிகுஞ்சு பொரிப்பகத்தில் கோழி உற்பத்தி திட்டம்.
முக்கிய அலுவலர்கள் தொடர்பு முகவரிகள்
1. மண்டல இணை இயக்குநர்,
கால்நடை பராமரிப்புத்துறை,
கால்நடை மருத்துவமனை வளாகம்,
கூட்செட் ரோடு, உதகமண்டலம்,
நீலகிரி மாவட்டம் – 643001.
தொலைபேசி: 0423 2440154
மின்னஞ்சல்: rjdooty2012[at]gmail[dot]com
2. துணை இயக்குநர்,
மாவட்ட கால்நடை பண்ணை,
உதகமண்டலம்,
நீலகிரி மாவட்டம் – 643006.
தொலைபேசி: 0423 2444064
மின்னஞ்சல்: dlfooty[at]gmail[dot]com
3. துணை இயக்குநர்,
கால்நடை பெருக்கம் (ம) தீவன அபிவிருத்தி,
உதகமண்டலம்,
நீலகிரி மாவட்டம் – 643001.
மின்னஞ்சல்: ddcbfdooty[at]gmail[dot]com
4. உதவி இயக்குநர்,
கால்நடை பராமரிப்புத்துறை,
கால்நடை மருத்துவமனை வளாகம்,
கூட்செட் ரோடு, உதகமண்டலம்,
நீலகிரி மாவட்டம் – 643001.
தொலைபேசி: 0423 2442210
மின்னஞ்சல்: adahooty[at]gmail[dot]com
5. உதவி இயக்குநர்,
கால்நடை பராமரிப்புத்துறை,
கால்நடை மருத்துவமனை வளாகம்,
மைசூர் ரோடு, கூடலூர்.
நீலகிரி மாவட்டம்.
மின்னஞ்சல்:adahgudalur[at]gmail[dot]com
6. உதவி இயக்குநர்,
கால்நடை நோய்புலனாய்வு பிரிவு,
கால்நடை மருத்துவமனை வளாகம்,
கூட்செட் ரோடு, உதகமண்டலம்,
நீலகிரி மாவட்டம் – 643001.
தொலைபேசி: 0423 2440028
மின்னஞ்சல்: ootyadiu2012[at]gmail[dot]com
தகவல் அறியும் உறிமைச்சட்ட தொடர்பு முகவரி
மண்டல இணை இயக்குநர்,
கால்நடை பராமரிப்புத்துறை,
கால்நடை மருத்துவமனை வளாகம்,
கூட்செட் ரோடு, உதகமண்டலம்,
நீலகிரி மாவட்டம் – 643001.
தொலைபேசி: 0423 2440154
மின்னஞ்சல்: rjdooty2012[at]gmail[dot]com