மூடு

செ.வெ.எண்:37- அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவியர்களுக்கு ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம் – பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் மூலம் களப்பயணம்

வெளியிடப்பட்ட தேதி : 25/01/2025

‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம் – பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” (Beti Bachao Beti Padhao) திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில், அரசுப் பள்ளிகளில் பயிலும் 180 மாணவியர்கள் குன்னூரில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்டல் மையத்திலுள்ள கண்காட்சி மற்றும் இராணுவ பயிற்சி மையம், தமிழ்நாடு ஆயுதப்படை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உதகை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி, பழங்குடியினர் ஆராய்ச்சி மையம், எமரால்டு மற்றும் பைக்காரா அணை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு நேரிடையாக களப்பயணம் மேற்கொண்டு பல்வேறு வாழ்க்கை சூழலையும், பல்வேறு துறைச் சார்ந்த அறிவை பெறுவதற்கான களப்பயணம் செல்லும் வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.01.2025) ஏற்பாடு செய்து, கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 35KB)