மூடு

செ.வெ.எண்:196- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருநங்கைகளும் விடியல் பயணத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்

வெளியிடப்பட்ட தேதி : 21/04/2025

தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் வாழும் திருநங்கைகளும், திருநங்கைகள் நலவாரியத்தால் வழங்கப்படும் அடையாள அட்டையுடன் சாதாரண கட்டணப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்க ஏதுவாக விடியல் பயணத் திட்டமானது விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள்,திருநங்கைகள் நலவாரியத்தால் வழங்கப்படும் அடையாள அட்டையைக் கொண்டு விடியல் பயணத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமிபவ்யாதண்ணீரு. இ.ஆ.ப. அவர்கள் இத்தகவலை தெரிவித்துள்ளார்கள்.(PDF 42KB)