மூடு

செ.வெ.எண்:213- நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள காலி பணியிடங்கள் ஒப்பந்த ஊதியத்தில் தற்காலிகமாக நிரப்பப்படவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 29/04/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கீழ்க்கண்ட பணியிடங்கள் ஒப்பந்த ஊதியத்தில் தற்காலிகமாக நிரப்பப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.

1. IT Co-Ordinator (01பணியிடம்)- தகுதி: MCA/BCA

2.Echo Technician (01 பணியிடம்)- தகுதி: B.Sc/Dipl in Cardiac Technology/Dipl in Medical Imaging Technology,

3. Data entry Operator (04 பணியிடங்கள்) தகுதி: ஏதேனும் ஒருபட்டப்படிப்பு / டிப்ளோமா (கணினி செயலிகள் அறிவு பெற்றிருக்க வேண்டும் வயதுவரம்பு – குறைந்தபட்சம் 21 வயது அதிகபட்சம் 45 வயது முன் அனுபவம்- குறைந்தபட்சம் 2 வருடங்கள் குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் (முழுமையான முகவரியுடன் ) மற்றும் சான்றிதழ் நகல்கள் (கல்வித் தகுதி / சாதிச்சான்று /ஆதார்) தபால் மூலமாக இவ்வலுவலகத்தில் பெற இறுதி நாள்-05.05.2025 மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள்.

தபால் மூலமாக அனுப்பவேண்டிய முகவரி:
முதல்வர், நிர்வாக அலுவலகம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இந்துநகர், உதகமண்டலம், நீலகிரி மாவட்டம்-643005. (PDF 69KB)