செ.வெ.எண்:269- தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதற்கான சேர்கை முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 30/05/2025
தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதன் மூலம் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற மகளிர் மற்றும் திருமணமாகாத 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆகியோரின் நலனுக்காக செயல்படுத்தப்படும் அரசின் பல்வேறு திட்டங்கள் கீழ் பயனடைய இயலும்.
இந்நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதற்கான சேர்கை முகாம்:
- உதகை பஞ்சாயத்து அலுவலகத்தில் ஜீன் 04ம் தேதியும்,
2. குன்னூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஜீன் 05ம் தேதியும்,
3. கோத்தகிரி பஞ்சாயத்து அலுவலகத்தில் ஜீன் 06ம் தேதியும்,
4. கூடலூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஜீன் 09-ம் தேதியும் நடைபெறஉள்ளது.(PDF 113KB)