• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:384- நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட் மானியத்தில் வழங்கும் திட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 17/07/2025
நீலகிரி மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு சோலார் பம்பு செட் தற்போது மானியத்தில் அமைத்துக்கொடுக்கப்பட்டு வருகிறது. டீசல் இன்ஜின் மூலம் நீர் இறைக்கும் விவசாயிகளுக்கு செலவுகளைக் குறைக்கும் பொருட்டு விவசாயியின் வேளாண் நிலங்களில் சூரிய ஒளியில் இயங்கக்கூடிய 5,7.5 மற்றும் 10 என்ற அளவில் குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் மானியத்தில் அமைத்துத்தரப்பட்டு வருகிறது. 2025-2026-ஆம் நிதியாண்டிற்கு உத்தேச இலக்கு 50 எண்கள் நீலகிரி மாவட்டத்திற்கு  ஒதுக்கப்பட்டுள்ளது.(PDF 119KB)