• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:442- நீலகிரி மாவட்டத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் 05.08.2025 அதி கனமழை (Red alert) பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 04/08/2025

இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை (05.08.2025) அதி கனமழை (Red alert) பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தின் ஒருசில இடங்களில் அதிக அளவு மழை பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், மண்சரிவு, மரங்கள், மரக்கிளைகள் சாலைகளில் விழுந்து பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் நாளை (05.08.2025) ஒரு நாள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.(PDF 277KB)