செ.வெ.எண்.525- சுற்றுலாத்துறை விருதுகள் – 2025
வெளியிடப்பட்ட தேதி : 03/09/2025
தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் சுற்றுலாத் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை பல்வேறு விருதுகளை வழங்க உள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில்முனைவோரும் உரிய தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினத்தன்று (27.09.2025) சென்னையில் வழங்கப்படும். அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்:15.09.2025 ஆகும். மேலும் தகவலுக்கு 0423 – 2443977, 7550009231 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 81KB)