செ.வெ.எண்:608- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் கூடலூர் வட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 07/10/2025
நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம் நாடார் திருமண மண்டபத்தில், முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில்; 181 பயனாளிகளுக்கு ரூ.3.14 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, 6 புதிய பகுதி நேரம், நடமாடும் நியாய விலை கடைகள் மற்றும் ரூ.35.82 இலட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய முழுநேர நியாயவிலைக்கடைக்கான கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.(PDF 125KB)
