செ.வெ.எண்:622- தேசிய புகையிலை கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் (NTCP) “புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் 3.0”
இந்திய அரசின் அறிவுறுத்தலின்படி, தேசிய புகையிலை கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் (NTCP), 60 நாட்கள் “புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் 3.0” (Tobacco Free Youth Campaign 3.0) 09 அக்டோபர் 2025 முதல் 08 டிசம்பர் 2025 வரை மாவட்ட அளவில் தேசிய புகையிலை கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் (NTCP) கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் அனைத்து மாவட்டத்திலும் துவங்கி வைக்க அறிவுறுத்தப்பட்டது.
அதன் தொடச்சியாக, துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய சுகாதார நிலையங்களில் புகையிலையின் தீங்கு விளைவிக்கும் விளைவுகள் குறித்த பொது விழிப்புணர்வை அதிகரித்தல். புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்களை மேம்படுத்துதல் (ToFEI) புகையிலை இல்லாத கிராமங்களுக்கான முயற்சி, COTRA, 2003 மற்றும் PECA, 2019 ஆகியவற்றின் அமலாக்கத்தை மேம்படுத்துதல், சமூக ஊடக ஈடுபாட்டை அதிகரித்தல் மற்றும் திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு 09 அக்டோபர் 2025 முதல் 08 டிசம்பர் 2025 வரை 60 நாட்களுக்கு ஏற்படுத்தப்படும்.(PDF 157KB)