“வாங்க கற்றுக்கொள்ளலாம்” என்னும் தலைப்பில் மக்களுக்கு கட்டணமில்லா இலவச தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 09/10/2025
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களில் “வாங்க கற்றுக்கொள்ளலாம்” என்னும் தலைப்பில் மக்களுக்கு கட்டணமில்லா இலவச தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களில் அக்டோபர் 11, 12 ஆகிய இரு நாட்கள் ஒரு மணி நேர பயிற்சி என்ற அடிப்படையில் காலை 10 மணி முதல் 11 மணி வரையிலும் பகல் 12 மணி முதல் 01 மணி வரையிலும் மாலை 04 மணி முதல் 05 மணி வரையிலும் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை மக்கள் மற்றும் தன்னார்வர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர் திரு. சி. வெங்கடாச்சலம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.(PDF 251KB)