செ.வெ.எண்:633- சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மின்சாரத்தினால் இயங்கும் புல் நறுக்கும் இயந்திரம் விநியோகம் வழங்கும் திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 14/10/2025
வேளாண் பட்ஜெட் அறிவிப்பு திட்டம் 2025-2026 – 50% மானியத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மின்சாரத்தினால் இயங்கும் புல் நறுக்கும் இயந்திரம் விநியோகம் வழங்கும் திட்டம் செயல்படுத்துதல்.
தீவன விரயத்தைக் குறைப்பதற்காகவும், கால்நடைகளின் செறிமான தன்மையை அதிகரித்திடவும் உற்பத்தித்திறனை பெருக்கவும், வேளாண் பட்ஜெட் அறிவிப்பு திட்டம் 2025-2026-ஆம் ஆண்டிற்கு, 50% மானியத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மின்சாரத்தினால் இயங்கும் புல் நறுக்கும் இயந்திரம் விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்தி, நீலகிரி மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறைக்கென 2025-2026-ஆம் ஆண்டிற்கு புல் நறுக்கும் கருவி (Chaff Cutter) ஒரு கோட்டத்திற்கு ஒரு பயனாளி என்ற வீதம் இரண்டு கோட்டங்களுக்கு இரண்டு பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்போர்கள் இத்திட்டத்தில் பயன்பெற, அருகாமையில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 48KB)