மூடு

செ.வெ.எண்:688- “பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி” திட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 07/11/2025

தமிழ்நாட்டில் “பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி” திட்டமானது பிப்ரவரி 2019 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நான்கு மாதத்திற்கு ஒருமுறை தலா ரூ.2000/- வீதம் ஆண்டிற்கு 6000/- ரூபாய் மூன்று தவணைகளில், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.(PDF 58KB)