மூடு

செ.வெ.எண்:18- மாற்றுத்திறனாளிகள் இலவச பயண சலுகை அட்டை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள அறிய வாய்ப்பு

வெளியிடப்பட்ட தேதி : 08/01/2026

மாற்றுத்திறனாளிகள் இலவச பயண சலுகை அட்டை பெற்றுக்கொள்ள 07.01.2026 முதல் 31.01.2026 வரை நாட்களில் அரசு விடுமுறை தினங்கள் தவிர்த்து ஏனைய பணி நாட்களில் அனைத்து மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் பெறும் வகையில் தாலுக்காவில் உள்ள இசேவை மையங்களிலும் அல்லது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கார்டன் சாலை , உதகையில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், சமிபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், பணிக்கு செல்லும் மாற்றுத்திறனாளி பணிச்சான்று கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி கல்வி பயிலும் சான்று, சிகிச்சை பெறும் மாற்றுத்திறனாளி சிகிச்சை பெறும் மருத்துவச்சான்றுடன் விண்ணப்பித்து இலவச பயண சலுகை அட்டை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளவும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 17KB)