செ.வெ.எண்:76- அரசு தலைமைக்கொறடா அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 04/02/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் செஞ்சிசாலை கொள்ளாளர் கிராமம் சிப்காட் வளாகத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10,000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் மற்றும் 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கி, “என் கனவு என் எதிர்காலம்” என்ற இணைய தளத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அந்தோணியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் 1500 பயனாளிகளுக்கு ரூ. 90.98 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 50KB)
