செ.வெ.எண்:100- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பழங்குடியினர் உழவர் சங்கத்திற்கு வேளாண் இயந்திரங்களின் சாவிகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 17/02/2026
நீலகிரி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம், கோவை இணைந்து, “தொல்குடி ஐந்திணை” பழங்குடியினர் வாழ்வாதார திட்டத்தின் கீழ், மசினகுடி பூதநத்தம் பூர்வமலை பழங்குடியினர் உழவர் சங்கத்திற்கு, ரூ.50 இலட்சம் மதிப்பில் (ரூ.45 இலட்சம் மானியம்) வேளாண் இயந்திரங்களுக்கான சாவிகள் மற்றும் கூடாரம் அமைப்பதற்கான ஆணையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 47KB)