செ.வெ.எண்:149- நீலகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு–II (தொகுதி-II/IIA பணிகள்) – பதவிகளுக்கான முதன்மை எழுத்துதேர்வு 15.03.2026 அன்று நடைபெற உள்ளது
நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு–II (தொகுதி-II/IIAபணிகள்) – பதவிகளுக்கான முதன்மை எழுத்துதேர்வு தேர்வானது 08.02.2026 அன்று முற்பகல் (OMR method) மற்றும் பிற்பகல் Descriptive Type நடைபெற இருந்தது தொழில்நுட்ப கோளாறு காரணமாக TNPSC-ஆல் இரத்து செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மேற்படி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு–II (தொகுதி-II/IIA பணிகள்) – பதவிகளுக்கான முதன்மை எழுத்துதேர்வு TNPSC-இன் அறிவிப்பின்படி எதிர்வரும் 15.03.2026 அன்று நீலகிரி மாவட்டத்தில், உதகமண்டலம் வட்டம், பிரீக்ஸ் நினைவு ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் முற்பகல் கொள்குறி வகை தேர்வு(OMR test) மற்றும் பிற்பகல் விரிவான முறைத்தேர்வுகள் (Descriptive Type Test) நடைபெற உள்ளது.
கொள்குறிவகை தேர்வில் (OMR test) 15 தேர்வர்களும், விரிவான முறைத்தேர்வில் (Descriptive Type Test) 17 தேர்வர்களும் பங்கேற்க உள்ளனர்.(PDF 72KB)