செ.வெ.எண்.217- வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளின் படி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – ற்கான தேர்தல் 23.04.2026 அன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள 108 – உதகமண்டலம், 109 – கூடலூர் (தனி) மற்றும் 110 – குன்னூர் ஆகிய 03 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு, வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகள் ஆகியவை போட்டியிட்ட வேட்பாளர்கள் / அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பொதுபார்வையாளர்கள் முன்னிலையில் காணொலி காட்சிப் பதிவு செய்யப்பட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்ட இருப்பு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளின் படி, அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் (Government Polytechnic College, Udhagamandalam) வைக்கப்பட்டுள்ளது. காப்பறைக்கு ஆயுதம் தாங்கிய மூன்று அடுக்கு பாதுகாப்பு 24X7 கண்காணிப்புக் கேமராவின் (CCTV) கீழ் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.(PDF 54KB)
