செ.வெ.எண்:474- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 24/09/2026
நீலகிரி மாவட்டம், கூடலூர் ஜானகி அம்மாள் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் நடைபெற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.. அவர்கள் இன்று (24.09.2026) துவக்கி வைத்து, 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மாலை, பழவகைகள், வெற்றிலை பாக்கு, மஞ்சள்கயிறு, குங்குமம், சந்தனம், வளையல், புடவை, இனிப்பு உள்ளிட்ட 9 வகையான சீர்வரிசை பொருட்கள் மற்றும் உணவினை வழங்கினார். (PDF 45KB)
