மூடு

இந்திய தேர்தல் ஆணையம் (ECI) 379 தேர்தல் களப் பணியாளர்களுக்கான 2 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பைத் தொடங்கியது

வெளியிடப்பட்ட தேதி : 23/06/2025

வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) மேற்பார்வையாளர்களுக்கான 13வது பயிற்சி வகுப்பு இன்று புதுடெல்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயக மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் (IIIDEM) தொடங்கியது. இந்திய தலைமை தேர்தல் ஆணையராகிய திரு. ஞானேஷ் குமார் இப்பயிற்சி வகுப்பை துவக்கிவைத்தார். இதில் 379 பேர் பங்கேற்றனர் (உத்திரப்பிரதேசம் 66, சண்டிகர் 111, மத்தியப்பிரதேசம் 128, நாகாலாந்து 67, மேகாலயா 7). கடந்த மூன்று மாதங்களில், இந்திய தேர்தல் ஆணையம் (ECI) 5,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. (PDF 1 MB)