• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:267- நிலச்சரிவு அபாயம் காரணமாக உதகை – நடுவட்டம் – கூடலூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது

வெளியிடப்பட்ட தேதி : 28/05/2025

நீலகிரி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையமானது, நாளை (29.05.2025) மற்றும் நாளை மறுநாள் (30.05.2025) மிக அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பெய்த மழையின் காரணமாக, நடுவட்டம் சாலை – தவளைமலை அருகே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் பெரிய பாறைகள், கற்கள் சாலையில் விழும் அபாயம் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை – பைக்காரா – நடுவட்டம் – கூடலூர் சாலையில் போக்குவரத்து கட்டுப்பாட்டு நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது.(PDF 41KB)