மூடு

செ.வெ.எண்:316 – நீலகிரி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கணினி மயமாக்கல் பணி நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 11/06/2024

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முழு நேர நியாயவிலைக் கடைகளில் கணினி மயமாக்கல் பணி நடைபெறுவதால், 12.06.2024 புதன் கிழமை பிற்பகல் முதல் 14.06.2024 வெள்ளி கிழமை வரை (இம்மாவட்டத்தில் வெள்ளி கிழமை நியாயவிலைக் கடைகளுக்கு வாராந்திர விடுமுறை நாள் ஆகும்) நீலகிரி மாவட்டத்தில் புதிய விற்பனை முனைய இயந்திரம் நடைமுறைக்கு வர உள்ளஇ 231 முழு நேர ரேஷன் கடைகள் இயங்காது. அதனால் பொதுமக்கள் அந்த நாட்களை தவிர்த்து இதர நாட்களில் வழக்கம் போல பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப.இ அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 30KB)