• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:326- வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிர்களுக்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்க மானியம் வழங்கப்படும்

வெளியிடப்பட்ட தேதி : 24/06/2025

2025-2026 ஆம் நிதியாண்டிற்காக வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ரூ.10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 5,000 /- மானியத் தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.(PDF 109KB)