செ.வெ.எண்:364- மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது
வெளியிடப்பட்ட தேதி : 11/07/2025
நீலகிரி மாவட்டத்தில் இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து அவர்களது முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நகர்ப்புற மற்றும் ஊராகப் பகுதிகளில் முன்களப் பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெறவுள்ளது.(PDF 44KB)