செ.வெ.எண்:369- வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் முன் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அறிவுரை வெளியிடப்படுகிறது
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடி செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வெளிநாட்டு வேலை தொடர்பான சந்தேகங்களுக்கு மற்றும் வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிய அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் 24 / 7 கட்டணமில்லா உதவி மையத்தினை தொடர்பு கொள்ளவும்.
• இந்தியாவிலிருந்து அழைப்புக்கு : 1800309 3793
• வெளிநாடுகளிலிருந்து : 08069009900 (Missed Call) 08069009901
• மின்னஞ்சல் : nrtchennai@gmail.com / nrtchennai@tn.gov.in
• வலைத்தளம் : https://nrtamils.tn.gov.in
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடும் நபர்கள், குறுக்கு வழிகளை தவிர்த்து, அரசு அமைத்துள்ள சட்டப்பூர்வமான வழியில் செல்லுபோது தான் பாதுகாப்பான வாழ்க்கையை கட்டியெழுப்ப முடியும் நினைவில் கொள்ள வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 50KB)