மூடு

செ.வெ.எண்:50- முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – “இது நம்ம ஆட்டம் 2026” போட்டிகள்

வெளியிடப்பட்ட தேதி : 23/01/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இளைஞர்களின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல்–மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், 25.01.2026 முதல் 08.02.2026 வரை தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – ‘ இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் 16 வயது முதல் 35 வயது வரையிலான விளையாட்டு வீரர், வீராங்கனைகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gov.in / www.cmyouthfestival.sdat.in. மூலமாக முன்பதிவு செய்ய கடைசி நாள் 24.01.2026 ஆகும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 69KB)